அண்ணாமலையை பார்த்து பயப்படும் காங்கிரஸ்... கர்நாடக பிரச்சாரத்தில் பரபரப்பு!
காங்கிரஸ் தற்போது கர்நாடக பிரச்சாரத்தில் அண்ணாமலை அவர்களை ஈடுபடுத்த தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது.
கர்நாடக சட்டசபை தேர்தல் வருகின்ற பத்தாம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பிரச்சாரம் முன்பே தொடங்கி விட்டது, குறிப்பாக பல்வேறு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க இணை பொறுப்பாளராக தமிழக பா.ஜ.க தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியுமான அண்ணாமலை அவர்கள் செய்யப்பட்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே! இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் இந்திய தேர்தல் ஆணையத்தின் மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.
குறிப்பாக அந்த கடிதத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் நட்சத்திர பேச்சாளராகவும், சட்டசபை தேர்தல் கர்நாடக பா.ஜ.க இணை பொறுப்பாளராகவும் பதவி வகித்து வருகிறார். அவர் கர்நாடகத்தில் முன்பே ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தின் மாவட்டங்களில் பல பொறுப்புகளில் அவர் பணியாற்றி இருக்கிறார்.
அவருக்கு கீழ் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளை தற்போது தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதாகவும், தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி இருப்பதாகவும், எனவே அவரை தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. குறிப்பாக காங்கிரஸ் எங்கு தாங்கள் தோற்றுவிடுவோமோ? என்ற ஒரு பயத்தில் கர்நாடக பிரச்சாரத்தில் அண்ணாமலை அவர்கள் பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தி இருக்கிறது. ஆனால் கர்நாடக மக்கள் தற்பொழுது அண்ணாமலை அவர்களுக்கு மிகுந்த வரவேற்பு கொடுத்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News