மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் செருப்பு காலுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதரணி: கொதிக்கும் இந்துக்கள்.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் செருப்பு அணிந்துக்கொண்டு நின்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதரணி.

Update: 2021-06-04 05:10 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் செருப்பு அணிந்துக்கொண்டு நின்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதரணி. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று முன் தினம் கருவறையில் காலை தீபாராதனை நடைபெற்றபோது தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீ மளமளவென பரவியதில் கோவிலின் கூரைகள் முழுவதும் சேதமடைந்தது.




 


இந்த தீ விபத்திற்கு காரணம் முழுக்கு ஆலய நிர்வாகத்தாத்தால் நடைபெற்றது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து நாகர்கோவில் பாஜக எம்.எல்.ஏ., காந்தி மற்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், நெல்லை பாஜக எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கோயிலில் சென்று பார்வையிட்டனர். இதனிடையே கோவிலி தீ விபத்துக்கு காரணம் பற்றி உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் பாஜக தலைவர் எல்.முருகன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.




 


இந்நிலையில், விளவங்கோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற தீ விபத்தை நேரில் பார்வையிட சென்றார். அப்போது அவர் செருப்பு காலுடன் கோவில் படிக்கட்டுகளில் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 



எம்.எல்.ஏ., உடன் பாதுகாப்பு வந்த போலீசார் கூட தனது காலணியை கழற்றிவிட்டு வந்து நிற்கிறார். ஆனால் விஜயதரணி மட்டும் ஏன் செருப்பை கழற்றிவிடாமல் கோவில் படிக்கட்டில் நிற்கிறார் என்று பகவதி அம்மன் பக்கதர்கள் அனைவரும் மிகவும் கொதிப்படைந்துள்ளனர். மேலும், கோவிலை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ. விஜயதரணி நீங்கள் மட்டும் ஏன் செருப்பை கழட்டி விடாமல் சென்றீர்கள் என இந்துக்கள் அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.




 


இது போன்றவர்களையும் நம்பி ஒரு சில இந்துக்கள் வாக்களித்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்து உள்ளது வேதனையாக உள்ளது என ஒட்டுமொத்த இந்துக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News