பிரதமரை கொலை செய்யும் சதியில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பா? விசாரணையில் பரபரப்பு தகவல்!

Update: 2022-07-16 11:35 GMT

பிரதமர் மோடியை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட நபர்களுக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி கடந்த 12ம் தேதி பீகார் மாநிலத்திற்கு வருகை தந்தார். அவர் அம்மாநில சட்டப்பேரவையின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்றார். அப்போது பிரதமரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டியிருக்கும் தகவல் கண்டுப்பிடிக்கப்பட்டது.

மேலும், உளவுத்துறை அளித்த தகவலின்படி கடந்த 11ம் தேதி மாலை பாட்னாவின் நயா டோலோ பகுதியில் பாட்னா போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முகமது ஜலாலுதீன், அக்தர் பர்வேஸ் உள்ளிட்ட 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஜார்க்கண்ட் மாநில காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் சதித்திட்டம் தீட்டிய இடத்தில் சோதனை மேற்கொண்டபோது அங்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆவணங்கள் கிடைத்ததாக போலீசார் கூறினர். அது மட்டுமின்றி பிரதமரின் பயணத்துக்கு முன்பே பாட்னாவில் தீவிரவாதிகள் ஒன்று கூடியதாகவும் சொல்லப்படுகிறது. அங்கு பிரதமர் மோடியை எவ்வாறு கொலை செய்வது என்பன பற்றிய சதித் திட்டமும் தீட்டியுள்ளனர்.

அது மட்டுமின்றி தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் பாட்னாவுக்கு வந்து ஆயுத பயிற்சியும் மேற்கொண்டது தெரியவந்தது. இவர்களுக்கு அந்நிய நாட்டில் இருந்து நிதியுதவியும் கிடைத்துள்ளது. அங்கு கிடந்த துண்டு பிரசுரங்களில் வருகின்ற 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை முஸ்லிம் நாடுகளாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துக்கள் இடம்பெற்றதாக பீகார் போலீசார் கூறினர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளுக்கும் தமிழகத்தில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பதாக பாட்னா உயர் அதிகாரி கூறியுள்ளார். இது பற்றிய விவரங்களை தமிழக போலீசாருக்கும் அனுப்பி வைத்துள்ளனர். இதனால் தமிழகத்தில் தற்போது தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source, Image Courtesy: Asianetnews

Tags:    

Similar News