நீலகிரியில் சேற்றில் சிக்கி உயிரிழந்த குட்டியானை.. 2 நாட்களாக கண்ணீர்விடும் தாய் யானை.!

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள செம்பாலா தேயிலைத் தோட்டம். அப்பகுதியில் கடந்த 10 நாட்களாக குட்டியுடன் தாய் இரண்டு பெரிய யானைகள் நடமாடியுள்ளது. நேற்று முன்தினம் காலை அந்தப்பகுதியில் செல்லும்போது, சேற்றில் சிக்கி குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

Update: 2021-07-26 10:47 GMT

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள செம்பாலா தேயிலைத் தோட்டம். அப்பகுதியில் கடந்த 10 நாட்களாக குட்டியுடன் தாய் இரண்டு பெரிய யானைகள் நடமாடியுள்ளது. நேற்று முன்தினம் காலை அந்தப்பகுதியில் செல்லும்போது, சேற்றில் சிக்கி குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

அதுபோன்று உயிரிழந்த குட்டி யானை குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் கால்நடை மருத்துவர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, குட்டி யானை அருகே நெருங்கவிடால் தாய் யானை மற்றொரு யானை நின்றுள்ளது. 

இதனால் கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ய முடியாமல் திணறினர். பெண் யானையும் மற்றொரு யானையும் உணவு, தண்ணீர் இன்றி கடந்த 2 நாட்களாக ஒரே இடத்தில் இருப்பது வனத்துறையினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News