மீண்டும் தமிழகத்தில் முக கவசம் கட்டாயமா? மருத்துவர்கள் கூறும் அறிவுரை என்ன?
நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் காரணமாக பெருமளவில் தாக்கம் ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக பல்வேறு மக்கள் உலக அளவில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்து இருக்கிறார்கள். இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக இரண்டாவது மற்றும் மூன்றாவது கொரோனா தாக்களின் போது அதிகமான பாதிப்பை எதிர்கொண்டது. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப் பட்டுள்ளன.
இதில் 95.21 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.87 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும். கடந்த 24 மணி நேரத்தில் 2,334 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது 28,303 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.06 சதவீதமாகும். தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.75 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 3,320 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,41,85,858 பேர். கடந்த 24 மணி நேரத்தில் 6,050 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது எனவே இத்தகைய காரணங்களுக்காக தமிழகத்தில் பொது இடங்களில் செல்லும் வயதானவர்கள் முக கவசம் கட்டாயமாக அணிந்து செல்ல வேண்டும் ஏனெனில் நோய் தொற்றிலிருந்து அவர்களை பாதுகாக்க இது ஒரு வழிதான் இருக்கிறது.
Input &Image courtesy: News