சேலத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று ரத்து.. ஆட்சியர் சொன்ன காரணம்.!

சேலம் மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசிகள் ஏராளமான மையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

Update: 2021-07-14 05:05 GMT

சேலம் மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசிகள் ஏராளமான மையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பிரதமர் மோடி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி தமிழகத்திற்கு தினமும் தேவைக்கேற்ப தடுப்பூசிகள் வந்து கொண்டே இருக்கிறது. 


ஆனால் சில மாவட்டங்களுக்கு முறையான தடுப்பூசிகள் சென்றடைவதில்லை என்று அதிமுக, பாஜக குற்றம்சாட்டி வருகிறது. அதில் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தினமும் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இதற்காக மக்கள் அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், சேலம் மாவட்ட முழுவதும் 138 மையங்களில் கடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மையங்களுக்கு 15,500 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் தினமும் மைங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டு வந்தனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசிகள் இருப்பு இல்லாத காரணத்தினால் இன்று (ஜூலை 14) மாவட்டத்தில் உள்ள அனைத்து மையங்களிலும் தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News