மீண்டும் உச்சத்திற்கு செல்லும் கொரோனா, அரசு எடுத்த அதிரடி முடிவு!
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாளை முதல் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்துவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று மீண்டும் உயர்ந்து வரும் நிலையில், நாளை முதல் (ஜனவரி 6) இரவு நேர ஊரடங்கை திமுக அரசு அறிவித்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பு வெளியூர் செல்லும் பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளை இரவு வெளியூர்களுக்கு செல்வதற்கு பொதுமக்கள் பலர் பேருந்துகள் மற்றும் ரயில்களில் முன்பதிவு செய்திருப்பர். தற்போது இரவுநேர ஊரடங்கு அறிவிப்பால் வெளியூர் செல்பவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாளை முதல் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்துவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
Source,Image Courtesy: Maalaimalar