தண்ணீர் திருடுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
தண்ணீர் திருட்டில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.
தண்ணீர் திருட்டில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. ஈரோடு மாவட்டம், பவானி ஆறு மற்றும் காளிங்கராயன் கால்வாய் ஆகியவற்றில் சட்டவிரோதமாக நீர் உறிஞ்சப்படுவதால், அனைவருக்கும் சமமான அளவில் தண்ணீர் கிடைப்பதில்லை எனவும், தமிழக அரசு 1962 மற்றும் 1967ம் ஆண்டுகளில் பிறப்பித்த அரசாணை அடிப்படையில் தண்ணீர் பகிர்ந்தளிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கு ஆதாரமாக தண்ணீர் விளங்கி வருகிறது. எனவே தண்ணீர் இன்றி யாராலும் வாழ முடியாது. கிடைக்கும் தண்ணீரை அனைவரைக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் ஒரு தரப்பினருக்கு மட்டும் கிடைப்பதாக அமைந்து விடக்கூடாது. மேலும், சமஅளவில் தண்ணீர் கிடைக்கும் வகையில் பாசனப் பரப்பை முறையாக பதிவு செய்ய வேண்டும். விவசாய நிலங்களை விரிவுப்படுத்தினால் நாடு பலனடையும்.
மேலும், தண்ணீர் திருட்டில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீரை திருடுபவர்கள் மீது பொதுப்பணித்துறையும், நீர்வள ஆதார துறையும் எடுக்கும் நடவடிக்கைகள் இல்லாமல் காவல்துறை உரிய வழக்குப்பதிவு செய்தால் மட்டும் முறையான புகார்கள் வரும் என்றனர்.
Source, Image Courtesy: Dinamalar