புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் தொடங்கியது!
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதில் சிறப்புமிக்க விழாவானா தேரோட்டமும், நாளை சிறப்புமிக்க ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தியது. இதன் பின்னரே கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி தேரோட்டம் நடத்தலாம் என்று கடலூர் மாவட்ட நிர்வாகம் அனுமதியை வழங்கியது.
இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். பக்தர்கள் இன்னும் அதிகளவு கூடுவார்கள் எனவும் எதிர்பாக்கப்படுகிறது.
Source, Image Courtesy: Daily Thanthi