காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் ஒருநாள் தாமதம்: புதிய தகவலை வெளியிட்ட இந்திய வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் பல மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் ஓடுகிறது.

Update: 2021-11-28 08:31 GMT

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் பல மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் ஓடுகிறது.

அதிலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கன முதல் அதி கனமழை பெய்கிறது. இதன் காரணமாக பல குடியிருப்புகள் மழை நீர் சூழ்ந்துள்ளது. மக்கள் வெளியில் வரமுடியாமல் படகுகள் மூலமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மழையில் இருந்து மக்கள் முழுமையாக மீள முடியாத நிலையில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்தது. அந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது நாளை (29ம் தேதி) உருவாகும் என கூறியிருந்தது.

இந்நிலையில், நாளை (29ம் தேதி) உருவாக இருந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது வருகின்ற 30ம் தேதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மீண்டும் ஒரு நாள் விட்டு காற்றழுத்த தாழ்வுநிலை நகரத்தை நோக்கி வரும்பொழுது கனமழை பெய்யவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், மற்றும் கடலோர மாவட்ட மக்கள் கனமழை பெய்யும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News