பண மதிப்பிழப்பு குறித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவேற்பு!
பண மதிப்பிழப்பு குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது மிகவும் சரியானது என்று வரவேற்று இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.;
மத்திய அரசு மேற்கொண்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள் செல்லும் என்று தற்போது உச்ச நீதி பரபரப்பு தீர்ப்பை அளித்து இருக்கிறது. இந்த ஒரு தீர்ப்புக்கு ஆதரவாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய வரவேற்பு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக ட்விட்டர் பதிவில் அவர் இதை பகிர்ந்து இருக்கிறார். இது பற்றி அவர் கூறுகையில், பண மதிப்பிழப்பு நீக்கம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்கிறோம். மத்திய அரசிற்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையில் ஆறு மாதங்களாக ஆலோசனைகள் நடந்தன. அத்தகைய நடவடிக்கைகள் கொண்டுவரப்பட நியாயமான தேவை அப்போது இருந்தது.
மேலும் மத்திய அரசின் முக்கிய முடிவாக முன்மொழிக்கப்பட்டதால் மட்டுமே இந்த முடிவு செயல் திறன் தவறானது என்ற கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது. பிரிவு 26 (2) சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீக்க முடியாது பொருளாதார கொள்கை விஷயங்களில் மிகுந்த கட்டுப்பாடு இருக்கத்தான் வேண்டும். நிபுணத்துவம் இருக்கும் நிர்வாகத்தை நீதிமன்றம் அதன் ஞானத்துடன் மாற்ற முடியாது என உச்சநீதிமன்றம் கூறிய கூறி இருக்கும் கருத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
2016 நவம்பர் எட்டாம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பண மதிப்பிழப்பு தொடர்பாக 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று அறிவித்தார். மேலும் அதற்கு பதிலாக இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் தாள்களை புதிதாக அச்சிட்டு வெளியிடும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த ஒரு நடவடிக்கை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தரப்பிலிருந்து தீர்ப்பு வெளியாக இருப்பது பல்வேறு தரப்பிலிருந்து வரவேற்பு பெற்று இருக்கிறது.
Input & Image courtesy: Thanthi News