கொரோனாவே ஒயல ! அதுக்குள்ள டெங்குவா ! தமிழகத்தில் டெங்கு பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா ?
"தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு மட்டும் 3 ஆயிரத்து 90 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது" என
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
நேற்றய தினம் சென்னை கண்ணகி நகரில் மருத்துவ முகாமை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் டெங்கு காய்ச்சல் குறித்து நிருபர்களிடம் பேசியதாவது "டெங்கு காய்ச்சல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு மட்டும் 3 ஆயிரத்து 90 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது 362 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்." என்று கூறினார்.
தமிழகத்தில் தாற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Image : India Today