மதுரை: கி.பி. 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டும், சிதைந்த நிலையில் சிவன் கோயிலும் கண்டுப்பிடிப்பு!

தமிழகத்தில் பண்டைய காலங்களில் கிராமம் தோறும் கோயில்கள் மற்றும் அதன் விவரங்களை தெரிந்து கொள்வதற்காக கல்வெட்டுகளையும் மன்னர்கள் வைத்து விட்டு சென்றனர். காலப்போக்கில் கோயில்கள் மற்றும் புராதன சின்னங்கள் ஒவ்வொன்றாக ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டும் வந்தது.

Update: 2021-11-12 07:07 GMT

கி.பி. 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் பொறித்து வைக்கப்பட்ட கல்வெட்டும், சிதைந்த நிலையில் சிவன் கோயில் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் பண்டைய காலங்களில் கிராமம் தோறும் கோயில்கள் மற்றும் அதன் விவரங்களை தெரிந்து கொள்வதற்காக கல்வெட்டுகளையும் மன்னர்கள் வைத்து விட்டு சென்றனர். காலப்போக்கில் கோயில்கள் மற்றும் புராதன சின்னங்கள் ஒவ்வொன்றாக ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டும் வந்தது.


தற்போதைய நிலையில் ஒவ்வொரு கிராமங்கள் மற்றும் மலை அடிவாரங்களில் உள்ள கோயில்கள் மற்றும் கல்வெட்டுகளை கண்டுப்பிடிக்க அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். அதனை தொடர்ந்து அங்கு தொல்லியல்துறையினர் ஆய்வுகளை மேற்கொண்டு சின்னங்கள் மற்றும் கல்வெட்டுகளை கண்டுப்பிடித்து வருகின்றனர். அதன்படி மதுரை மாவட்டம் வில்லூர் அருகே போத்தநிதி என்ற கிராமத்தில் கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பாண்டியர் காலத் தமிழ் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனை கண்டறிவதற்காக போத்தநதி ஊராட்சி மன்றத் தலைவர் விநாயகமூர்த்தி என்பவர் தங்கள் கிராமத்தில் பழமையான கோயில ஒன்று இருப்பதாக அரசுக்கு தகவல் அளித்துள்ளார். தகவலை தொடர்ந்து மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து.முனீஸ்வரன் தலைமையிலான குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் கி.பி. 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தின்போது பொறிக்கப்பட்ட கல்வெட்டும், சிதைந்த நிலையில் சிவன் கோயிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Nakheeran


Tags:    

Similar News