பழங்காலத்தைச் சேர்ந்த ஐம்பொன் அம்மன் சிலை: ஆழ்துளை கிணறு அமைக்கும் பொழுது கண்டுபிடிப்பு கண்டுபிடிப்பு!

பழங்காலத்தைச் சேர்ந்த ஐம்பொன் அம்மன் சிலை தற்போது ஆழ்துளை கிணறு அமைக்கும் பொழுது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

Update: 2023-02-28 01:15 GMT

திருச்சி மாவட்டம் லால்குடி அருகில் அமைந்துள்ளது தான் நன்னி மங்கலம் என்ற ஒரு சிறு கிராமம். இந்த கிராமத்தில் தான் தற்பொழுது அம்மன் சிலை அதுவும் பழங்காலத்தை சேர்ந்த ஐம்பொன் அம்மன் சிலை தற்போது கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது. இந்த ஒரு கிராமத்தில் நேற்று ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகள் நடைபெற்றது, ஆழ்துளை கிணறு அமைக்கும் பொழுது ஆழமாக குழி தோண்ட வேண்டும் என்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டு, அங்கு அதிக ஆழத்தில் ஒரு குழி தோண்டப்பட்டு இருக்கிறது.


அப்பொழுது ஆழ்துளை கிணற்று அமைக்கும் பணியின் போது தொழிலாளர்கள் ஈடுபட்டு குழி தோண்டி இருக்கிறார்கள். அப்போது ஆழ்துளை கிணற்றில் மண் பகுதியில் ஏதோ ஒரு பொருள் சிக்குவது போன்று தொழிலாளர்கள் உணர்த்து இருக்கிறார்கள். இதை எடுத்து அந்த பொருளை வெளியே எடுத்து பார்த்த பொழுது அது அரை அடி உயரம் கொண்ட அம்மன் சிலை என்பது தெரிய வந்து இருக்கிறது. ஐம்பொன் அம்மன் சிலை என்பது தெரிய வந்து இருக்கிறது.


திடீரென்று அம்மன் சிலையை பார்த்தவுடன் ஒரு நிமிடம் பிரமித்து இருக்கிறார்கள். ஏனெனில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பொழுது இப்படி அம்மன் சிலை கிடைப்பது இதுவே முதல் முறையாக அமைந்து இருக்கிறது. இது குறித்து தகவல் உள் கிராமம் முழுவதும் பரவியதால் பெரும் கூட்டம் மற்றும் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இந்த பகுதி மக்கள் அந்த சிலையை வழிபாடு செய்தார்கள். இது எடுத்து உரிய துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவை தற்போது மாற்றப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy:Thanthi News

Tags:    

Similar News