அண்ணா பிறந்தநாளில் 700 பேர் விடுதலை செய்யும் தி.மு.க - பயங்கரவாதிகளும் அடக்கமா ?
Breaking News.
தமிழக சட்டமன்ற கூட்ட தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்புகளில் மிக முக்கியமாக அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 தேதி தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் வெளியிடப்படுவர் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை பெற்று வரும் 700 ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.
இதற்கு முன் கடந்த 2009 ஆண்டு திமுக ஆட்சிகாலத்தில் இதே போல ஒரு அறிவிப்பில் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 9 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்தது தற்போதும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இந்த 700 பேரில் எத்தனை பேர் பயங்கரவாத செயல்களில் ஈடுப்பட்டு இருப்பரோ என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றன.