சென்னை : தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரிடம், தி.மு.க'வினர் மிரட்டல் விடுக்கும் தோரணையில் வாக்குவாதம் செய்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்துள்ளது. எல்லா இடங்களிலும் மக்கள் ஆர்வமாக தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிக்கு வந்து செலுத்தினர். இதே வேளையில் பல இடங்களில் ஆளும் கட்சியாக இருக்கும் தி.மு.க'வினரின் அராஜக போக்கு மேலோங்கி தான் இருந்தது என்று பலரும் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.
இதன் வரிசையில், சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வாக்குப்பதிவு நடைபெறும் பள்ளி நுழைவாயிலில் தி.மு.க'வினர், காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
"வாக்குப்பதிவு நடைபெறும் பள்ளிக்கு உள்ளே தேர்தல் அதிகாரிகளின் வாகனங்கள் தவிர எந்த ஒரு வாகனங்களும் அனுமதிக்க முடியாது" என்று காவல்துறை தரப்பு தெரிவிக்கவே தி.மு.க'வினர் அதிர்ச்சி அடைந்து காவல்துறையிடம் மிரட்டல் தொனியில் பேசியுள்ளனர்.