பட்ஜெட் கூட்டத்தொடரில் கோட்டையை முற்றுகையிட்டு போராடுவோம்: பரபரப்பை ஏற்படுத்தும் அறிவிப்பு!

தி.மு.க தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டால் கோட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு.

Update: 2023-03-22 00:49 GMT

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மகளிர் துணை குழு சார்பில் மகளிர் தின கருத்தரங்கம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் ராஜி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். மகளிர் துணைக் குழு பாண்டி செல்வி வரவேற்று பேசியிருக்கிறார். மதுரை அரசு ஆஸ்பத்திரியின் மயக்கவியல் மற்றும் நீக்கியல் உதவி பேராசிரியர் சையது ஜாஹிர் உசைன், ஜனநாயக மாதர் சங்கத்த மாநில செயலாளர் பொன்னுத்தாயி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மகளிர் துணைக் குழு தலைவி ஆகியோர் இந்த போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்து பேசினார்கள்..


இதனைத் தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் செல்வம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியின் போது குழு எடுத்த முக்கிய முடிவுகள் பற்றி தெரிவித்து இருந்தார். அப்பொழுது அவர் கூறுகையில், தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் உங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தருவோம் என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தார்கள். சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற மாநாட்டில் கூட நியாயமான கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றி தருவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அவர் உறுதியளித்தபடி தற்போது எங்களது பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும்.


அதேபோல் காலியாக இருக்கும் சுமார் ஆறு லட்சம் பணியிடங்களை தற்போது நிரப்ப வேண்டும் என்றும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மார்ச் 28ஆம் தேதி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. பட்ஜெட்டில் எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் நாங்கள் இருக்கிறோம். கோரிக்கைகள் நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டால் கூட்டத்தொடர் நடைபெறும் நாளில் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News