கிராம டவுன் பஸ்சை நிறுத்தி வைத்த தி.மு.க அரசு... உண்மையை போட்டு உடைத்த கலெக்டர்!
தென்காசி கலெக்டர் தற்பொழுது கிராம மக்களிடம் தங்கள் பகுதிக்கு பேருந்து வராதது ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை கைப்பற்றியது. குறிப்பாக மகளிர் இலவச பேருந்து பயணத்திட்டம் என்பது இதில் முக்கியமானது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு என்னதான் அரசு பேருந்து பயணம் என்றாலும், இது அரசு நகர பேருந்து பயணத்திற்கு மட்டும்தான் இத்தகைய சலுகைகள் கிடைக்கப்பெற்று இருக்கிறது. குறிப்பாக கிராமங்களில் இருக்கும் டவுன் பஸ்களுக்கு இத்தகை சலுகைகள் கிடைக்கவில்லை. இந்த திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து அரசு போக்குவரத்து கழகத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக பெரும்பாலான கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. குறிப்பாக கிராமங்களுக்கு செல்லும் அரசு நகர பேருந்துகள் தங்கள் பகுதிக்கு வருவது கிடையாது என்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதி வாடியூரில் கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் இடம் கிராம பொதுமக்கள் கேள்வி ஒன்று கேட்டு இருக்கிறார்கள்.
இதற்கு தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் அவர்கள் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தின் காரணமாக போக்குவரத்து கழகத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பல்வேறு கிராமப்புறங்களுக்கு செல்லும் நகர பேருந்துகளை அரசு நிறுத்திவிட்டது. எனினும் உங்கள் பகுதிக்கு குறித்த வாய்ப்புகளை கேட்டு இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்து இருக்கிறார். நஷ்டத்தில் இயங்குவதால் இத்தகைய முடிவை தி.மு.க எடுத்து இருப்பது அம்பலமாகி இருக்கிறது. இந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
Input & Image courtesy: Mediyaan News