தி.மு.கவின் ஒப்புதல் இல்லாததால் தாமதமாகும் மெட்ரோ பணி - உரிய நேரத்திற்குள் பணியை முடிக்க முடியுமா?

தி.மு.க அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் தாமதமாகும் மெட்ரோ பணி.

Update: 2023-01-20 03:12 GMT

தி.மு.க அரசு உரிய ஒத்துழைப்பு இல்லாததால் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் செய்திகள் மக்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்குமா? என்பதில் தற்போது சந்தேகம் எழுந்து இருக்கிறது. ஏனெனில் அரசின் முழு ஒத்துழைப்பு கிடைக்காமல் இந்த பணிகள் தற்பொழுது ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. உரிய காலத்திற்குள் அவற்றை முடிக்க முடியுமா? என்ற ஒரு சந்தேகமும் தற்போது எழுந்து இருக்கிறது.


சென்னை பேரூர் முதல் பவர் ஹவுஸ் வரை மெட்ரோ ரயில் சேவைகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலில் தவிர்க்க ஏற்கனவே பரங்கிமலை சென்ட்ரல் விமான நிலையம் மற்றும் திருவொற்றியூர் இடையே இரண்டாம் கட்ட ரயில் சேவை இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த ஒரு பணிகள் தற்பொழுது மெதுவாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாநில அரசின் முழு ஒத்துழைப்பு இல்லாத ஒரு காரணத்தினால் இவை முழுவதுமாக கிடைப்பில் போடப்பட்டு இருக்கிறது.


நிலத்திற்கு கீழே செல்லும் குடிநீர் மற்றும் கழிவு நீர் குழாய்கள் மேலும் தொலைபேசி கேள்விகள் போன்றவற்றை மாற்றி விடுவது தொடர்பான பணிகள் மாநில அரசு முறையாக செய்யவில்லை என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது. இந்த பணிகள் மெதுவாக காரணத்தினால் மெட்ரோ பணி தொய்வு ஏற்பட்டு இருக்கிறது. எனவே இதன் காரணமாக நிலத்தின் அடியில் அமைக்கப்படும் தூண்கள் தற்பொழுது அமைக்கப்படாமல் இருக்கிறது. விரைவாக உரிய நேரத்தில் இந்த பணியை முடிக்க தி.மு.க ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் மெட்ரோ நிர்வாகம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

Input & Image courtesy: News J

Tags:    

Similar News