பொது இடங்களில் பாத்து பேசுங்க.. கட்டுப்பாட்டை இழக்க வேண்டாம்: மீண்டும் தூக்கத்தை இழந்த ஸ்டாலின்?

மக்களிடம் கெட்ட பெயர் எடுக்க வேண்டாம் என்று கழக கண்மணிகளிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

Update: 2023-03-24 01:00 GMT

தி.மு.க ஆட்சியில் பல்வேறு அமைச்சர்கள் முதல் எம்.எல்.ஏக்கள் வரை அனைவரும் மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் தங்களுடைய சுய விருப்பங்களுக்காக வார்தைகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள். குறிப்பாக பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவு கூட இல்லாமல் மக்களை தங்களுடைய வாய்க்கு வந்த மாதிரி திட்டுகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேசிய உரை தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக அவர் கூறுகையில், கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தும் செயல்களை செய்யாதீர்கள் என அவர் வலியுறுத்தி இருக்கிறார். சென்னை அறிவாலயத்தில் தி.மு.க மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது.


இதில் ஸ்டாலின் பேசிய பொழுது, லோக்சபா தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது. எனவே நாடு முழுவதும் இந்த ஒற்றுமை உணர்வோடு, மத சார்பற்ற தலைவர்கள் தேர்தல் களத்தில் ஈடுபட்டால் நாம் நிச்சயம் வெல்ல முடியும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் தேர்தலுக்கான பணிகளை துவங்கி விடுங்கள் கட்சியின் கட்டமைப்புகளை பலப்படுத்துங்கள் என்ற அறிவுரையை கூறுகிறார். சட்டசபை தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.


தி.மு.க நிர்வாகிகள் கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தாதவாறு மாவட்ட செயலாளர் பார்த்துக்கொள்ள வேண்டும். சில இடங்களில் தகாத சில செயல்கள் நடக்கிறது என்றும் அவர் மறைமுகமாக குறிப்பிட்டு இருக்கிறார். அவற்றை அனுமதிக்காதீர்கள் தேவையில்லாத பிரச்சினைகளை பேசாதீர்கள் என்றும அறிவுரை கூறியிருக்கிறார். தங்களுடைய வரம்பு மீறி தவறாக பேசுவதை கட்டுப்படுத்துங்கள் என்று அவர் கூறியிருப்பது உண்மையிலேயே தன்னுடைய கட்சிக்காரர்கள் வெளியில் எப்படி செயல்படுகிறார்கள்? என்பதை புரிந்து கொள்வதாக தான் தெரிகிறது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News