2 லட்சம் லஞ்சம் கேட்ட தி.மு.க பிரமுகர்... கலெக்டர் இடம் தைரியமாக மனு கொடுத்த பெண்...

வீடு கட்டுவதற்கு இரண்டு லட்சம் லஞ்சம் கேட்ட தி.மு.க பிரமுகர் மீது தைரியமாக பெண் ஒருவர் புகார் கொடுத்து இருக்கிறார்.

Update: 2023-04-17 02:15 GMT

சேலம் மாவட்டம் மாட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி என்பவர் இவருடைய மனைவி ஆராயி என்பவர் தான் தற்பொழுது சேலம் கலெக்டர் அலுவலகத்தில் துணிச்சலாக முன்வந்து புகார் ஒன்று எழுதி இருக்கிறார். குறிப்பாக தி.மு.க பிரமுகர் ஒருவர் வீடு கட்ட இடையூறு செய்வதாகவும் மேலும் 2 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் புகார் அளித்து இருக்கிறார். இந்த ஒரு சம்பவம் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவருடைய கணவரால் கைவிடப்பட்டு தற்போது நத்தம் ரோட்டில் இருக்கும் ஐந்து சென்ட் நிலத்தில் இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக கூரை வீட்டில் குடியிருந்து வருகிறார்.


இவர் அந்த நிலத்தில் வீடு கட்ட எண்ணி இருக்கிறார். அப்பொழுது அந்த ஏரியா பகுதியைச் சேர்ந்த தி.மு.க கவுன்சிலர்கள் மற்றும் சில நபர்கள் வந்து இது புறம்போக்கு நிலம் இங்கு வீடு கட்ட கூடாத அப்படி வீடு கட்டினால் லஞ்சம் தரவேண்டியது இருக்கும் என்பது போன்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். நாங்கள் இங்கு இருப்பது ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம், கணவரால் கைவிடப்பட்ட பிறகு நான் 3 மகள்களுடன் வசித்து வருகிறேன்.


இப்படிப்பட்ட சூழ்நிலையில் வீடு கட்ட எனக்கு இரண்டு லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று கூறிய பிறகு அதிர்ச்சியாக இருந்தது. தாங்கள்தான் இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று அந்த மனுவில் அவர் கூறியிருந்தார். மேலும் தி.மு.க பிரமுகர்கள் அந்த பகுதியைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் சிலரும் இணைந்து கொண்டு அந்த பெண்ணை மிரட்டி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News