தேர்தலை பார்த்து பயந்து ஒதுங்கும் தி.மு.க எம்.பிக்கள்: ஆளும் கட்சியின் இன்றைய நிலைமை?
நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட தயக்கம் காட்டும் தி.மு.க எம்.பிக்கள்
நாடாளுமன்ற தேர்தல் 2024ம் ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்காக பல்வேறு கட்சிகளும் தற்போதைய தேர்தல் பணிகளை தீவிரமாக தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்த ஒரு நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட தி.மு.க காட்டி வருவதாக பத்திரிக்கையில் செய்து வெளியாக இருக்கிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக தி.மு.க மற்றும் அதன் கூட்டணியுடன் சேர்ந்து 38 எம்.பிக்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் வரும் தேர்தலில் 2024 ஆம் ஆண்டு தி.மு.க எம்.பிக்கள் மீண்டும் போட்டியிட விருப்பம் இல்லை என்றும், அவர்கள் தயக்கம் காட்டி வருவதாகவும் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியிருக்கிறது. அதனுடைய புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது பிழைப்புக்கு வழியில்லாமல் ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பிகளின் நிலைமை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் காரணமாக அவர்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பணத்தை செலவழிக்க தயக்கம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக கடந்த லோக்சபா தேர்தலின் போது தி.மு.க சார்பில் போட்டியிட போட்டியிட்ட ஒரு சிலரை தவிர்த்து மற்றவர்களிடம் தேர்தல் நிதி என தலா 5 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டது. அவர்களில் சிலர் பெரும் பணக்காரர்கள் அதனால் அவர்களுக்கு தேர்தல் நிதி குறித்து நெருக்கடிகளை எதிர் கொள்ளவில்லை. ஆனால் மற்றவர்கள் எப்படியும் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி ஆகிவிட வேண்டும் என்று எண்ணத்தில் வட்டிக்கு கடன் வாங்கி செலவுகளை செய்து இருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது.
எம்.பி ஆகிவிட்டால் ஆண்டுதோறும் மத்திய அரசு தரும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் ஐந்து கோடி ரூபாயில் 25 சதவீத கமிஷன் தொகையாக 1.25 கோடி ரூபாய் வரை கிடைக்கும். ஐந்து ஆண்டுகளில் சுமார் 6:30 கோடி நிச்சயம் நாம் பெறுவோம் என்று எதிர்பார்ப்பில் பலரும் இதில் காசை வாரி இறைத்தார்கள். ஆனால் நோய்த்தொற்று காரணமாக அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. மாறாக மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இதனால் தி.மு.க கூட்டணி எம்.பிக்களுக்கு நினைத்த அளவிற்கு வருமானம் இல்லாமல் போனது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா நோய் தொற்று காரணமாக மத்திய அரசு எம்.பிக்களுக்கு வழங்கி வந்து தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்து செய்தது, அவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது.
Input & Image courtesy: Mediyaan News