பேனா நினைவுச் சின்னம் அமைப்பதில் குறியாக இருக்கும் தி.மு.க அரசு - வல்லுநர் குழு அமைத்து ஆய்வு செய்தது

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்குப் மத்திய அரசின் வல்லுநர் குழு இன்று ஆய்வு.

Update: 2022-08-25 10:39 GMT

சென்னையில் மிகவும் புகழ்பெற்ற மெரினாவில் கருணாநிதி நினைவிடம் அருகில் 137 அடி உயர பேனா நினைவுச்சின்னம் அமைப்பது குறித்தும், இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மத்திய வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வல்லுநர் குழு இன்று ஆய்வு செய்ய உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு சென்னை கடற்கரையில் அண்ணா நினைவிடத்தில் பின்புறம் தற்போது நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த நினைவிடத்தில் அருகில் நினைவுச்சின்னம் அமைப்பது தி.மு.கவின் நீண்டநாள் கனவாக இருந்து வந்தது. தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தற்போது அதனை முதன்மை நோக்கமாகக் கொண்டு உள்ளார்கள்.


ஆனால் இந்த பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி கோரி விண்ணப்பம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அப்போது 14 பேர் அடங்கிய வல்லுநர் குழு இத்திட்டம் எதற்காக செயல்படுத்தவேண்டும் என்றும்   இதனால் கடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வல்லுனர் குழுவின் பரிந்துரை அளிக்க உள்ளது. அதன் அடிப்படையில்தான் மத்திய ஆணையம் இது வேண்டுமா? வேண்டாமா? என்று தீர்மானிக்க உள்ளது.


பல்வேறு கட்ட அறிக்கைகள் தயார் செய்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் வாயிலாக மக்களிடம் கருத்துக் கணிப்பு கூட்டம் நடத்த இருக்க வேண்டும். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதை நடத்தியதாக தெரியவில்லை. கடலோரப் பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டத்தில் தமிழக அரசின் செயல்பாடு வெளிப்படையாக இருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. 

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News