மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்ய முடியவில்லை... மனம் உடைந்த தி.மு.க. கவுன்சிலர் ராஜினாமா...
தன்னுடைய வார்டு மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்ய முடியவில்லை என்று கூறி தி.மு.க கவுன்சிலர் ராஜினாமா.
கரூரில் தனது வார்டு மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் கூறி தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் ராஜினாமா செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளும் கட்சியாக இருந்தும் கூட மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை கூட தன்னால் செய்ய முடியவில்லை என்று கூறிய இவர் தன்னுடைய பதவியை தற்போது ராஜினாமா செய்திருக்கிறார். இப்படி சில கவுன்சிலர்கள் நல்லவர்களாக இருந்தாலும் கூட மக்களுக்கு கிடைக்க வேண்டியவற்றை அவர்கள் கேட்டும், அதிகாரிகளிடம் முறையிட்டும் அதை செய்யாமல் இருக்கும் அரசாங்கத்தின் மீது கோபப்படுவதா? அல்லது தன்னை குறை கூறுவதா? என்று தெரியாமல் தற்பொழுது தி.மு.க கவுன்சிலர் ஒருவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்டது தான் பள்ளப்பட்டி என்ற பேரூராட்சி. இது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 29 வார்டுகளில் 22 வார்டுகளில் தி.மு.க கூட்டணி கைப்பற்றியது. இதன் தலைவராக தி.மு.க முனவர் ஜான் என்பவர் துணைத்தலைவராக, பள்ளிப்பட்டி நகர தி.மு.க செயலாளர் பஷீர் என்பவரும் பதவி வகித்து வருகிறார்கள். மேலும் இங்கு மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு வார்டு உறுப்பினர்கள் தங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை முன் வைத்தார்கள். அப்போது தி.மு.கவைச் சேர்ந்த 15வது வார்டு உறுப்பினர் ஜமால் முகமது தன்னுடைய வார்டு மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பலமுறை கோரிக்கை விடுத்த நிலையில் செய்து தரப்படாமல் இருப்பதாக குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து கவுன்சிலர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக கூறி மனு ஒன்று அளித்து இருக்கிறார்.
பிறகு ராஜினாமா கடிதத்தை அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு வெளியே வந்த கவுன்சிலர் ஜலால் முகமது பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில், "நான் 35 ஆண்டுகளாக தி.மு.கவில் உறுப்பினராக பதவி வகித்து வருகிறேன். தற்போது ஆளும் கட்சி உறுப்பினராக இருந்தும் எங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை என்னால் நிறைவேற்ற முடியாமல் இருக்கிறது. மேலும் இது பற்றிய நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் செய்து வருவதால் நான் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
Input & image courtesy: Mediyaan News