கற்கும் போது சம்பாதிக்கும் திட்டம்...பிரிட்ஜ் படிப்புகள்... அசத்தும் UGC-யின் திட்டம்!
பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு உதவும் UGC-யின் திட்டம்.
மூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழுக்களை (SEDGs) சேர்ந்த மாணவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்தும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான (HEIs) வரைவு வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) புதன்கிழமை வெளியிட்டது. கற்றல் குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்கான பிரிட்ஜ் படிப்புகள், கற்கும் போது சம்பாதிக்கும் திட்டம், அவுட்ரீச் திட்டங்கள் மற்றும் கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் அத்தகைய மாணவர்களை கல்வி முறையில் இணைத்துக்கொள்ளவும், வீழ்ச்சியைக் குறைக்கவும் சமவாய்ப்புக் கலத்தை அமைப்பது போன்ற முன்முயற்சிகளை வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன.
தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020, SEDG களை குறைவான பிரதிநிதித்துவ பிரிவுகள், சமூக பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர், கிராமங்கள், சிறு நகரங்களைச் சேர்ந்த மாணவர்கள் என அடையாளப்படுத்துகிறது. பெண்கள் மற்றும் திருநங்கைகள் போன்ற பலரும் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய இருக்கிறார்கள். UGC-யின் முக்கிய திட்டங்களில், சம்பாதிக்கும் போது-கற்கும் திட்டமும் உள்ளது.
SEDG மாணவர்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் வாரத்தில் 20 மணிநேரம், மாதத்தில் 20 நாட்கள் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படுவதாகவும், வகுப்பு நேரத்திற்குப் பிறகு வழங்கப்படும் பகுதி நேர சேவைகளுக்கு மணிநேர அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுவதாகவும் அது கூறுகிறது.
Input & Image courtesy: The print