கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டரிடம் மக்கள் மனு!
கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரி கலெக்டர் இடம் மக்கள் மனு கொடுத்து இருக்கிறார்கள்.
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேருந்து நிலையம் அருகே உள்ள வீர ஆஞ்சநேயர் கோவில் இன் அமைந்திருக்கிறது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும் இது இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது. மாரண்டஅள்ளி பகுதியில் உள்ள அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து வருடா வருடம் சிறப்பாக வீர ஆஞ்சநேயருக்கு அனுமான் ஜெயந்தி விழா எடுத்து வழிபாடு செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் 23ஆம் தேதி அன்று பொதுமக்கள் அனுமான் ஜெயந்தி விழா எடுக்க தயாராகி இருந்தார்கள்.
ஆனால் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் முன் பகுதியில் தனிநபர் ஒருவர் இடத்தை ஆக்கிரமித்து சுய லாபத்திற்காக அனுபவித்து வருகிறார். இதனால் விழா காலங்களில் ஆஞ்சநேயருக்கு விழா எடுப்பதற்கு போதிய மிகவும் அவதிப்பட்டு வந்தார்கள்? இந்நிலையில் அனுமான் ஜெயந்தி விழா நடைபெறுவதால் ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்றி பொதுமக்களின் பொது சொத்துக்களை மீட்டு தர வேண்டும் என்று பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் முடியாத நிலையில் தர்மபுரி கலெக்டரிடம் மனு கொடுத்து இருக்கிறார்.
மனுவின் போது ஆய்வு செய்த கலெக்டர் ஆஞ்சநேயர் கோவில் முன் உள்ள பகுதிகளை ஆக்கிரமிப்புகளை அகற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்து கடிதம் எழுதி இருக்கிறார். இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கு காரணமாக இந்த மாதிரி பிரச்சனைகள் நிகழ்வதாகவும் அவர் குறிப்பிடுகிறார். இதனால் கலெக்டர் மாரண்டஅள்ளி பக்தர்களின் கோரிக்கை ஏற்று கோவிலுக்கு சொந்தமான புகார்க்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவு அளித்து இருக்கிறார்.
Input & Image courtesy: Malaimalar