சீனா to சென்னை - போலியான BSI முத்திரை பதித்த 672 LED பல்புகள் பறிமுதல்!
இந்திய தர நிர்ணய அமைப்பின் சோதனை போலியான BSI முத்திரை கொண்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்திய தர நிர்ணய அமைப்பு (BIS), சென்னை கிளை அலுவலகம், சென்னை டாக்ஸ் புலனாய்வு பிரிவு, சுங்க மாளிகை ஆகியவற்றின் அதிகாரிகள் குழு, 11 பிப்ரவரி 2023 அன்று சென்னை ராயபுரம், கன்டெய்னர் சரக்கு நிலையம், ஓயார்டில் சோதனை மேற்கொண்டனர். போலியான பி.ஐ.எஸ் முத்திரை கொண்ட பொருட்களை சீனாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வருவதாகக் கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின்போது, சில பொருட்கள் பி.ஐ.எஸ் சட்டம் 2016 ஐ மீறுவதாக கண்டறியப்பட்டது. 672 LED லைட்டிங் செயின்கள் போலி பி.ஐ.எஸ் பதிவு முத்திரையைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. 10,000 பிளக்குகள் மற்றும் கேபிள்கள் அசெம்பிளி ஆகியவை பி.எஸ்.ஐ தர முத்திரை (ISI மார்க்) கொண்டதாக இல்லை. பிளக்குகள் மற்றும் கேபிள்கள் பி.ஐ.எஸ்-ன் கட்டாயச் தர சான்றிதழின் கீழ் உள்ளன.
இந்தப் பொருட்கள் இந்திய தர நிர்ணய அமைவன அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு அவற்றைப் பாதுகாப்பாக வைக்க சுங்கத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர். இந்த போலி பிஐஎஸ் முத்திரைக் குற்றத்திற்கு, முதல் மீறலுக்கு பிஐஎஸ் சட்டம், 2016 இன் பிரிவு 29-ன் படி, இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 2,00,000 த்திற்குக் குறையாத அபராதம் விதிக்கப்படும்.
Input & Image courtesy: News