தி.மு.க. அமைச்சர் அறிவித்த குடும்ப கடன் ரூ.2.64 லட்சம் ! முதல் ஆளாக கட்ட வந்தவரால் பரபரப்பு !

தமிழக அரசின் கடன் ரூ.5.7 லட்சம் கோடி ரூபாய் இருப்பதாக திமுக நிதியமைச்சர் நேற்று வெள்ளை அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார். அதில் ஒவ்வொரு குடும்பத்திற்கு தலா 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

Update: 2021-08-10 12:21 GMT

தமிழக அரசின் கடன் ரூ.5.7 லட்சம் கோடி ரூபாய் இருப்பதாக திமுக நிதியமைச்சர் நேற்று வெள்ளை அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார். அதில் ஒவ்வொரு குடும்பத்திற்கு தலா 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், பொம்மைக்குட்டைமேட்டை சேர்ந்தவர் காந்தியவாதி ரமேஷ். இவர் தனது கடனுக்கான தொகையை செலுத்துவதற்காக ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு வந்தார். அப்போது ஆர்.டி.ஓ.விடம் தனது கடனுக்கான காசோலையை வழங்கினார். ஆனால் அதனை அவர் வாங்க மறுத்துவிட்டார். தனக்கு இதற்கான அதிகாரம் இல்லை என்று கூறி உயர் அதிகாரிகளிடம் செல்லுங்கள் என கூறியுள்ளார். இந்த சம்பவம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக நிதியமைச்சர் அறிவித்த கடன் தொகையில் எனது குடும்பத்துக்கான பங்கை முதல் ஆளாக காசோலையுடன் வந்தேன். ஆனால் ஆர்.டி.ஓ. வாங்க மறுத்துவிட்டார். உயர் அதிகாரிகளிடம் செல்லுமாறு கூறினார்.

எனவே இந்த காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க உள்ளேன். பொதுமக்கள் அனைவரும் தங்களது கடனை செலுத்தும்பட்சத்தில் அவர்களுக்கு வங்கி மூலம் ரூ.15 லட்சம் வழங்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் தொழில் செய்து தங்களது கடன்களை அடைத்து விடுவார்கள் என கூறினார்.

இவரது பேச்சு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தான் உண்டு, தனது குடும்பம் உண்டு எனறு வாழும் இந்த காலத்தில் அரசு வாங்கிய கடனை அடைக்க வந்த இவருக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Source: Dinamalar

Image Courtesy: Dinamalar

https://www.dinamalar.com/news_detail.asp?id=2820441

Tags:    

Similar News