2 நாளில் மீட்கப்பட்ட 11 சுவாமி சிலைகள் - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடி!

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் முயற்சிகளின் காரணமாக 2 நாட்களில் வெவ்வேறு இடங்களில் 11 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-23 03:25 GMT

தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை காரணமாக இரண்டு வெவ்வேறு இடங்களில் சுமார் இரண்டு நாட்களுக்குள் பதினோரு சுவாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் கைப்பற்றிய சிலைகளில் லாரா ரெட்டி என்பவரிடமிருந்து ஒரு சிவகாமி சிலை, ஆஞ்சநேயர் சிலை, நாக தேவதை, சிவன் ஆகிய சிலைகள் என நான்கு சிலைகள் கைப்பற்றப்பட்டன. விழுப்புரம் பகுதியில் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையின் காரணமாக இரண்டு வெவ்வேறு இடங்களில் 11 வகையான பழமையான சுவாமி சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


விழுப்புரம் மாவட்டத்தில் பொம்மியார் பாளையம் என்ற இடத்தில் அமைந்துள்ளது தான் மெட்டல் கிராஃப்ட் என்ற கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை இந்த கடையில் திருடப்பட்ட பழங்கால உலோக சிலைகள் சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக தகவல்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பெயரில் தான் இந்து நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டுள்ளார்கள். இந்த தகவலின் பெயரில் கடந்த 17ஆம் தேதி வளாகத்தில் சோதனை செய்கையில் அர்த்தநாரீஸ்வரர் சிலை இருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டது.


இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் வழங்கிய ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளை அதிரடியாக செய்துள்ளார்கள். இது எடுத்து தேடுதல் வேறு தீவிர படுத்திய போது கடைக்குள் சட்டவிரதமாக மறைத்து வைக்கப்பட்ட ஏழு பழங்கால சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News