கனமழை எதிரொலி கடலூரில் 10 ஆயிரம் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் !

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இது தவிர வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த காரணமாகவும் கடலூர் மாவட்டத்தில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது.

Update: 2021-11-20 12:47 GMT

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இது தவிர வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த காரணமாகவும் கடலூர் மாவட்டத்தில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது. அதிலும் கடலூர் நகராட்சிக்குட்பட்ட ஆல்பேட்டை அருகே தென்பெண்ணையாறு கடலில் கலக்கும் இடமாகும்.

இதனிடையே கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் மழையால் தென்பெண்ணையாற்றுக்கு வரும் உபரிநீர் அதிகரிக்கிறது. இதனால் கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் சாத்தனூர் அணையை வந்தடைகிறது. அங்கும் நிரம்பியதால் நேராக திறந்துவிடப்படும் தண்ணீர் கடலில் கலந்து வருகிறது. அதன்படி சாத்தனூர் அணையில் இருந்து சுமார் 50 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இது மட்டுமின்றி கடலூர், விழுப்புரம் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதுனால் காட்டாற்றுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தென்பெண்ணை ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி சுமார் 1.25 லட்சம் கனஅடியாக அதிகரித்தது.

இந்நிலையில், இன்று தென்பெண்ணை ஆற்றின் இரண்டு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடலூர் புதிய ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுங்கச்சாவடி சாலை, மேல்பட்டாம்பாக்கம் சாலை, அழகியநத்தம் சாலை தண்ணீரில் மூழ்கியது. கடலூர் புறநகர் பகுதிகளான குண்டுசாலை, பெரியகங்கணாங்குப்பம், செம்மண்டலம், குண்டு உப்பலவாடி, கண்டக்காடு, தாழங்குடா, நாணல்மேடு, சுனாமி நகர், எஸ்.என்.சாவடி உட்பட சுமார் 50 இடங்களுக்கு மேலாக ஆற்றுநீர் புகுந்தது.

இந்த வெள்ளநீர் 10 ஆயிரம் வீடுகளை சூழ்ந்துள்ளது. அங்குள்ளவர்கள் வெளியேற சிரமப்பட்ட நிலையில் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் ஆற்றுநீர் வடிய சில நாட்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி வயல்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அறுவடைக்கு தயாரான விலைநிலங்களும் தண்ணீரில் மூழ்கப்பட்டுள்ள விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Maalaimalar


Tags:    

Similar News