பிரியாவின் தந்தை கோரிக்கையை நிராகரித்த தி.மு.க அரசு

அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சை காரணமாக தற்பொழுது தமிழகத்தைச் சேர்த்த கால்பந்து வீராங்கனை உயிரிழந்து இருக்கிறார்.

Update: 2022-11-16 06:24 GMT

பல்வேறு கனவுகளோடும், தமிழகத்திற்காக பல்வேறு தங்க பதக்கங்களை வாங்கி தர வேண்டும் என்று துடிப்புடன் இருந்த கால்பந்து வீராங்கனை தான் பிரியா. இவருடைய கனவு தற்போது மண்ணோடு மண்ணாய் போய்விட்டது. அரசு மருத்துவமனையின் இரண்டு மருத்துவர்கள் செய்த தவற்றின் காரணமாக தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட கால்பந்து வீராங்கனை பிரியா தற்பொழுது உயிரிழந்து இருக்கிறார். இது அவருடைய தந்தையை பெரும் அளவில் பாதித்து இருக்கிறது, மற்றும் பிரியாவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள அனைவரும் பெரும் சோகத்தில் தற்போது இருக்கிறார்கள்.


ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த ப்ரியா, ராணி மேரி கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கால் ஜவ்வு பிரச்சினை காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அங்குள்ள மருத்துவர்கள் தவறான அறுவை சிகிச்சை காரணமாக சில தினங்களுக்கு முன்பு அவருடைய கால் இழக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்து இருக்கிறார்.


இந்த ஒரு சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பிரியாவின் அறுவை சிகிச்சைக்கு தவறான சிகிச்சை வழங்கிய இரண்டு மருத்துவர்கள் தற்பொழுது மற்றொரு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் பிரியாவின் தந்தை கோரிக்கை படி, அந்த இரண்டு மருத்துவர்களையும் கைது செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை தி.மு.க அரசினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

Input & Image courtesy: Asianet News

Tags:    

Similar News