இலங்கை கோயிலில் ஆய்வு நடத்தனும்: மத்திய, மாநில அரசுக்கு முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கடிதம்!
சோழ மன்னர்கள் ஆட்சி செய்த இலங்கையில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த கோயிலில் தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்று முன்னாள் சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் 78 ஆண்டுகளுக்கும் மேலாக சோழ மன்னர்கள் ஆட்சி செய்தாக சொல்லப்படும் நிலையில், பொன்.மாணிக்கவேல் மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் இலங்கையில் இருக்கின்ற எடகடே கிராமத்தில் 1009 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜ சோழன் கட்டிய உத்தம சோளீஸ்வரன் உடைய மகாதேவர் கோயில் இருப்பதாகவும், அதனை 1912ம் ஆண்டு ஐரோப்பிய கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த கோயிலுக்கு 21 ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டு அதன் வருமானத்தைக் கொண்டு கோயிலை பராமரிக்க வேண்டும் எனவும் கல்வெட்டில் கூறப்பட்டிருப்பதாக பொன்.மாணிக்கவேல் கூறியுள்ளார். எனவே மத்திய, மாநில தொல்லியல் துறை இணைந்து இலங்கையுடன் பேசி ஆராய்ச்சி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Daily Thanthi