தமிழகத்தில் முழு ஊரடங்கு ஆரம்பம்: யார், யார் வெளியில் செல்ல அனுமதி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமைக்ரான் வைரஸ் நாளுக்கு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்டவைகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-01-09 03:05 GMT

இந்நிலையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டது. அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் கடைகள் அடைப்பு, பேருந்துகள் ஓடாது. இதில் காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி, நகை கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் திறக்கப்படாது. மேலும், டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை மெட்ரோ ரயில் சேவை இயங்காது. மின்சார ரயில்கள் குறைந்தளவு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஓட்டல்களில் பார்சல் சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு செல்பவர்கள் அதற்கான பயண டிக்கெட்டை காண்பித்தால் போலீசார் அனுமதிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Daily Thanthi

Image Courtesy:The Indian Express

Tags:    

Similar News