பவுர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை !

Update: 2021-10-18 07:57 GMT

பவுர்ணமி தினம்மான  நாளை திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது  அதனால் கிரிவலம் செல்லும் பக்தர்களிடையில்  கவலையை ஏற்படுத்தியுள்ளது 

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் :-

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். இதனை கருத்தில் கொண்டு பவுர்ணமி தினங்களான நாளை காலை 6 மணி முதல் 21-ந்தேதி இரவு 12 மணிவரை திருவண்ணாமலை மலைச்சுற்றும் பாதையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது. எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வரவேண்டாம்.

பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் தொற்று பரவலை தடுக்கும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு முற்றிலும் இல்லை என்ற நிலையை அடைய அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.

என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Image : Van Rental Chennai

Maalaimalar

Tags:    

Similar News