மாணவிகள் மடியில் படுத்துக்கொண்டே செல்போனில் வீடியோ பார்க்கும் மாணவர்கள்!
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் நடவடிக்கை பார்க்கும்போது பெற்றோர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் கண்ணீர் வரும் அளவிற்கு இருக்கிறது. சமீபகாலமாக பள்ளியில் ஆசிரியர்கள் முன்பாக ஒழுங்கீனமாக நடந்து கொள்வது, ஆசிரியர்களை அடிக்க பாய்வது போன்ற செயல்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது போன்ற சம்பவம் கடந்த ஒரு சில மாதங்களாக பார்த்து வருகின்றோம். குறிப்பாக திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில்தான் மாணவர்கள் அதிகமான அட்டகாசம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு பயந்து நடுங்கிய மாணவ, மாணவிகள் ஓட்டம் பிடிக்கும் காலம் போய், தற்போது மாணவர்களுக்கு பயந்து ஆசிரியர்கள் பாடம் நடத்தும் நிலை வந்துள்ளது. ஆசிரியர்கள் யாரையும் அடிக்கக்கூடாது என்ற சுற்றறிக்கையை தமிழக அரசு போட்டது. அதன் பின்பு இருந்து மாணவர்களின் சேட்டைகள் அதிகரிக்க தொடங்கியது. ஆசிரியர்களுக்கு அது ஒரு துன்பகாலமாக மாறிப்போச்சி.
இதற்கு மத்தியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றது. அதன் பின்னர் தொற்று படிப்படியாக குறைந்த பின்னர் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அப்போதில் இருந்து மாணவர்கள் மற்றும் மாணவிகளின் நடவடிக்கைகள் மாறிபோனது. ஆசிரியர்கள் முன்பாக நடனம் ஆடி கலாய்ப்பது மற்றும் அவர்களை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்னர் பேருந்தில் அரசுப்பள்ளி மாணவிகள் மது குடித்தனர். இந்த வீடியோ வெளிவந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் பின்னர் மாணவர் ஒருவர் பள்ளி வளாகத்திலேயே ஆசிரியரை அடிக்க பாய்ந்தது மற்றும் வேறு ஒரு பள்ளியில் டேபிள் மற்றும் பென்ச்களை அடித்து நொக்கிய வீடியோக்களை பார்த்தோம்.
இந்நிலையில், மதியம் உணவு இடைவேளையின்போது மாணவர்கள், மாணவிகள் மடியில் தலை வைத்து செல்போனில் வீடியோ பார்த்து வந்தனர். இதனை அங்கிருந்த சில மாணவர்கள் படமாக எடுத்து இணையத்தில் பரப்பினர். தற்போது அந்த சம்பவத்தை பார்த்த பெற்றோர்கள் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் கையில் மீண்டும் பிரம்பு கொடுத்தால் மட்டுமே மாணவர்களை திருத்த முடியும். இல்லை என்றால் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே மாறிவிடும். இனிமேல் ஆவது இந்த அரசு விழித்துக்கொண்டால் சமூதாத்திற்கு நல்லது.
Source, Image Courtesy: Asianetnews