பெரம்பலூர்: சிறுவாச்சூரில் மீண்டும் சாமி சிலைகள் உடைப்பு: இந்து முன்னணி கடும் கண்டனம்!

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் மீண்டும் கோயிலில் உள்ள சாமி சிலைகள் உடைக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு இந்து முன்னணி அமைப்பு கடும் கண்டனங்களை பதிவிட்டுள்ளது.

Update: 2021-10-27 11:17 GMT

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் மீண்டும் கோயிலில் உள்ள சாமி சிலைகள் உடைக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு இந்து முன்னணி அமைப்பு கடும் கண்டனங்களை பதிவிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், அருகே உள்ள சிறுவாச்சூரில் மிகவும் பிரசித்த பெற்ற மதுர காளியம்மன் கோயில் அமைந்துள்ள. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வரலாற்றின்படி மூலஸ்தான கோயிலான பெரியசாமி மலைக்கோவில் உள்ளது.


இந்த கோயிலில் கடந்த அக்டோபர் மாத்தில் 5 சாமி சிலைகளை மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போன்று சிறுவாச்சூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியாண்டவர் கோயிலிலும் சிலைகளை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த இந்துக்கள் அனைவரும் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர். சிலைகளை உடைத்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் போலீசாருக்கு கோரிக்கை வைத்தனர்.


இந்நிலையில், அந்த சம்பவங்கள் நடந்து ஒரு மாதத்திற்குள் மீண்டும் சிறுவாச்சூரில் கோயிலில் உள்ள சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மறுபடியும் ஒரே ஊரில் கைவரிசை காட்டி வரும் மர்ப நபர்களை போலீசார் இன்னும் கைது செய்யாமல் இருப்பது இந்துக்கள் கோயில்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே உருவாகியிருப்பதாக இந்து முன்னணி குற்றம்சாட்டி வருகின்றது.

Source, Image Courtesy:Hindu Munnani

Tags:    

Similar News