காளியம்மன் கோவிலில் அம்மன் சிலை உடைப்பு: போலீசார் நடவடிக்கை!

காளியம்மன் கோவிலில் அம்மன் சிலையை செய்த படுத்திய மூன்று நபர்களை போலீசார் கைது செய்து இருக்கிறது.

Update: 2022-10-30 07:24 GMT

அம்மன் சிலை சேதம்:

திண்டுக்கல்லில் அமைந்து இருக்கின்ற காளியம்மன் கோவிலில் தற்போது அம்மன் சிலை செய்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக போலீசார் மூன்று பேரை கைது செய்து இருக்கிறார்கள். திண்டுக்கல்லில் சவோரியார் பாளையம் அருகே சி.கே.சி.எம் காலணியில் அமைந்துள்ளது தான் காளியம்மன் கோவில். இங்கு இந்த பகுதியை சேர்ந்த மக்கள் இந்த காளியம்மன் கோவிலில் வழிபட்டு வருகிறார்கள்.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த கோவிலில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலின் நடையின் இரு பக்கங்களிலும் தலா ஒரு அமன் சிலை இருக்கின்றது. இந்நிலையில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கோயிலுக்கு வந்தனர். அப்பொழுது கோவில் நடையின் பக்கவாட்டில் இருக்கும் ஒரு அம்மன் சிலை சேதம் படுத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.


போலீஸ் நிலையத்தில் புகார்:

அம்மன் சிலை சேத பட்டிருப்பதை அறிந்த நபர்கள் போலீஸிடம் புகார் ஒன்றை அளித்து உள்ளார்கள். மேலும் மர்ம நபர்கள் இரவில் இந்த சிலையை சேதப்படுத்தி சென்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் தெற்கு காலனியில் அமைந்துள்ள போலீஸ் நிலையத்தில் புகாரின் பெயரில் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அதை பகுதியை சேர்ந்த மூன்று பெயர் இந்த அம்மன் சிலையை சேதம் படுத்தியது தெரிய வந்தது. அந்த மூணு பேரையும் விசாரத்த போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.

Input & Image courtesy:Thanthi News

Tags:    

Similar News