தி.மு.க அரசு செய்யும் வஞ்சகம் இது... எங்களை ஓரம் கட்டுவதா... புலம்பும் அரசு ஊழியர்கள்?

தி.மு.க அரசு வருவதற்கு காரணமாக இருந்த அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை மறுத்து எங்களை வஞ்சிக்கிறது திமுக அரசு.

Update: 2023-03-23 01:26 GMT

அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கட்டாயம் இந்த ஆண்டு பட்ஜெட்டில் எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் என்று பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் அவர்களின் நம்பிக்கைகளை சீர்குலைக்கும் விதமாக தி.மு.க பட்ஜெட் அறிவிப்பில் அவர்களின் நலனுக்காக எந்த ஒரு அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை என்பது அவர்களை பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றிய மாநில தலைவர் சண்முக ராஜன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது பற்றி அவர் கூறியிருக்கிறார்.


குறிப்பாக தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் ரத்து செய்து பழy ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்துதல், சரண்டர் விடுப்பு தொகையினை அமல்படுத்துதல், அங்கன்வாடி, சத்துணவு, நூலகர்கள், கிராமப்புற உதவியாளர்கள் போன்ற நிரந்தர பணி கோரிக்கைகளை மறுத்து வெளியிட்ட இந்த பட்ஜெட் குறித்த அவர்கள் தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறார்கள். குறிப்பாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் இதனை வன்மையாக கண்டிக்கிறது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.


தி.மு.க அரசு வருவதற்கு முதற்காரணமாக இருந்த ஒட்டுமொத்த அரசு அலுவலர்களையும் இந்த அரசு வஞ்சித்துக் கொண்டு இருக்கிறது. தொடர்ந்து எங்களை புறக்கணிப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எனவே தமிழக அரசு அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும் அர்ப்பணிப்பு உணர்வுடன், பணி சுமையுடன் நேரம் காலம் அறியது நிறைவேற்றி வரும் எங்களை புறக்கணிப்பது தற்பொழுது அரசுக்கு நல்லது அல்ல. இதற்கான பின்விளைவுகளை சந்தித்து ஆகவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பது. தற்பொழுது தி.மு.க மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Input & Image courtesy: Zee News

Tags:    

Similar News