ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் காலமானார்!
புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி 76, உடல்நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடல் தெலங்கானாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு நாளை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

சென்னை, சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டு நாளை நல்லடக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகுமாரி மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Source: DailyThanthi
Image Courtsy: Dailythanthi
https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/18094006/Telangana-Governor-Tamilisai-Soundarajans-mother-passes.vpf