வெள்ளம் சூழ்ந்ததால் ஆன்லைன் வகுப்பு - அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி?
கல்லூரி வளாக முன்பு வெள்ளம் சூழ்ந்த காரணத்தின் காரணமாக ஆன்லைன் வகுப்பிற்கு மாற்றப்பட்ட அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி வகுப்புகள்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் அரசு ஓமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை செய்யப்பட்ட வருகிறது. தமிழகத்தில் ஒரே ஒரு அரசு மருத்துவ ஹோமியோபதி கல்லூரியாக இது திகழ்கிறது. இங்கு 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த பகுதியில் நான்கு வழி சாலை அமைத்திடும் பொழுது கல்லூரி அமைந்துள்ள பகுதி முன்பு தாழ்வான பகுதியாக மாறியதால் பருவமழை காலங்களில் சுற்றுப்புறங்களில் கண்மாய்கள் நிரம்பி மறு கால்வாய் வழியாக பாய்ந்த தண்ணீர் கல்லூரி வளாகத்திற்கு முன்பு வெள்ளம் போல சூழ்ந்து கொண்டது.
எனவே கடந்த ஆண்டு இறுதியில் வெள்ளம் சூழ்ந்த பொழுது மாணவ, மாணவியர் மற்றும் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் பத்திரமாக வெளியிடப்பட்ட ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் வழக்குப் பொழுது கம்மாள்கள் நிரம்பி மறுக்கால்வாய் பாய்ந்ததை தொடர்ந்து திருமங்கலம் அரசு ஹோமியோபதி கல்லூரி வெள்ளத்தால் சூழப்பட்டது. மேலும் ஆய்வகம் கலையரங்கம் உள்ளிட்ட புற நோயாளிகள் மருத்துவமனை மற்றும் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அனைத்தும் வெள்ளத்தால் சூழப்பட்டது.
வகுப்பறைகள் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தது, இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த மாணவ, மாணவியர் அவசர அவசரமாக வகுப்புகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். மேலும் தற்போது தற்காலிகமாக பாடம் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. இதனால் பெரும் சிரமத்திற்கு ஆளான மாணவ மாணவியர் வெள்ளம் ஏற்பட்டு ஆன்லைன் முறையில் நடத்தப்படும் வகுப்புகள் பங்கேற்பது செயல்முறை இன்றி சிரமமாக உள்ளது என்று கூறுகிறார்கள்.
Input & Image courtesy: