அரசு பள்ளி மாணவிகள் வகுப்பறையின் பொருட்களை அடித்து நொறுக்கிய வீடியோ: கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை?

அரசு பள்ளியை சேர்ந்த மாணவிகள் வகுப்பறையில் உள்ள பொருட்களை அடிக்கும் காட்சி சமீபத்தில் வைரலாகி இருக்கிறது.

Update: 2023-03-10 01:15 GMT

தர்மபுரி மாவட்டத்தில் மாரண்டஅள்ளி அருகே அமைந்துள்ளது தான் அரசு மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் சுமார் 700 திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு சுமார் 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த வாரம் அரசு பொது தேர்வு எழுதும் +1 மற்றும் பிளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு செயல்முறை தேர்வு தொடங்கி இருக்கிறது. இந்த தேர்வு முடிவடைந்ததை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் ஒரு வகுப்பில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.


அப்பொழுது சில மாணவர்கள் வகுப்பறையில் இருந்த பொருட்களை குறிப்பாக மேஜை, நாற்காலி போன்றவற்றை தூக்கி வீசி அவர்களைப் படைத்து இருக்கிறார்கள். மேலும தங்களுடைய கையில் இருந்த காம்பால் மின்விசிறிகள் ஸ்விட்ச் போர்டு ஆகியவற்றை தாக்கி நொறுக்கி இருக்கிறார்கள். இந்த ஒரு வீடியோ தான் தற்பொழுது தளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மாணவர்களுக்கும், மாணவிகளும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க செய்த சில மாணவிகளும் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இது குறித்து தலைமை ஆசிரியர் ஈடுபட்ட மாணவர்கள் பெற்றோரை வரவழைத்து நடந்து சம்பவத்தை அனைத்தையும் தெரிவித்து இருக்கிறார்கள். பின்னர் பள்ளியில் இதுபோன்ற செல்களில் ஈடுபட மாட்டோம் என்று மாணவிகள் மற்றும் மாணவர்களிடம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் இது பற்றி கூறுகையில், மாமல்லபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் மீசை மற்றும் நாற்காலிகளில் சில மாணவ மாணவிகள் அடுத்து செய்த படுத்தும் காட்சிகள் தற்பொழுது பரவலாக்கி பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி கேட்டு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டு இருக்கிறது. இதற்கு யாருடைய தவறு காரணம்? என்பது தொடர்பாக தற்போது விசாரணை நடந்து வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Hindu News

Tags:    

Similar News