கௌரவ விரிவுரையாளர் மாற்றுத் திறனாளிகளுக்கு இடம் வழங்குமா தி.மு.க அரசு? போராட்டத்தில் ஆசிரியர்கள்!
கௌரவ விரிவுரையாளர் தேர்வு மாற்றுத் திறனாளிகளுக்கான வாய்ப்பு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை.
கௌரவ விரிவுரையாளர் தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாய்ப்பு முழுமையாக நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று முதலமைச்சர் இடம் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் அனைவரும் ஒன்று சேர்ந்து தற்போது புதிய ஒரு கோரிக்கையை விடுத்து இருக்கிறார்கள். ஏற்கனவே தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் மற்றும் பிரச்சினைகள் கிளம்பி தான் வருகிறது. குறிப்பாக இடைநிலை ஆசிரியர்கள் முதல் ஒப்பந்த செவிலியர்கள் வரை பல்வேறு பிரிவினர்கள் தற்போது போராட்டத்தில் களமிறங்கி இருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்பொழுது மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கமும் தங்களுடைய கோரிக்கைக்காக சாலையில் இறங்கி போராட்டங்களை செய்ய தொடங்கியிருக்கிறது. தமிழக அரசு கலைக்கல்லூரி மற்றும் கல்வியில் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டதை தொடர்ந்து, அதில் மாற்றுத்திறனாளி பட்டதாரிகளுக்கு பலர் பணி வாய்ப்பு பெற முடியாமல் இருக்கிறார்கள்.
எனவே முதுகலைப் பட்டம், ஆராய்ச்சி படிப்பு, முனைவர் பட்டம் மாநில விரிவுரையாளர் தகுதி தேர்வு மத்திய பிரிவுரையாளர் தகுதி தேர்r ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று தகுதியான மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஒரு ஆண்டிற்குள் வாதத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் பெற்றிட வழிவகை செய்யும் வகையில் அவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து இருக்கிறார்கள்.
Input & Image courtesy: ABC Live News