சென்னை: மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கோரி போராட்டம்!
சென்னை காமராஜர் சாலையில் மாற்று திறனாளி ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கோரி மாற்றுத் திறனாளிகள் போராட்டம்.
சென்னை காமராஜர் சாலையில் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். குறிப்பாக சென்னையில் அடுத்துள்ள பூந்தமல்லியில் மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் இருவருக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள். இது அந்த பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் சமீப காலமாக இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் பலரும் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள். இந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளி ஆசிரியர் பயிற்சி முகாமில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுவரை மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு அரசு பணி வழங்கவில்லை என்று அவர்கள் தங்களுடைய வேதனையை தெரிவித்து இருக்கிறார்கள். குறிப்பாக மாற்றுத்திறனாளி ஆசிரியர்களை பணி நியமனம் தொடர்பாக முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் அவர்கள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தங்களது வேண்டுகோளை விடுத்து இருக்கிறார்கள்.
மேலும் இது தொடர்பாக மனுவை கொடுக்க மாற்றுத்திறனாளிகள் முதல்வரை அனுப்பிய பொழுது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். எனவே உடனடியாக ஆணை வழங்க கோரி மாற்றுத்திறனாளி ஆணையர் அலுவலகத்தில் நேற்று முதல் சுமார் 20க்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் களமிறங்கி இருக்கிறார்கள்.
Input & Image courtesy: J News