"அனிதாவும் தமிழச்சி தான், தஞ்சை மாணவியும் தமிழச்சி தான்"- அனுமன் சேனா தலைவர் விளாசல்!

Update: 2022-01-27 08:43 GMT

"ஒரு மரணத்துக்கு ஒப்பாரியும், மற்றோரு மரணத்தை கண்டும் காணாமல்  இருப்பது நல்லதல்ல " என்று தஞ்சை மாணவி இறப்பு விவகாரம் குறித்து, அனுமன் சேனா நிறுவனத் தலைவர் பரபரப்பு பேட்டி. 


கட்டாய மத மாற்றத்தால் உயிரிழந்த தஞ்சை  மாணவிக்கு நீதி வேண்டி, பா.ஜ.க கட்சி, இந்து முன்னணி அமைப்பு என. பல்வேறு அமைப்புகள் உண்ணாவிரதம், கருப்புக் கொடி ஏந்துதல், விளக்கேற்றி அஞ்சலி செலுத்துதல் போன்ற போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 


இந்நிலையில் தஞ்சை மாணவி இறப்பு குறித்து அனுமன் சேனா அமைப்பின்  நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "மாணவி அனிதா மரணத்தில்  பல்வேறு கருத்துகளை கூறியவர்கள் , இப்பொழுது  லாவண்யா விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன் என தெரியவில்லை.அனிதாவும் தமிழச்சி தான், தஞ்சை மாணவியும்  தமிழச்சி தான். இதில் என்ன வேறுபாடுகள்?  


ஒரு மரணத்துக்கு ஒப்பாரியும், மற்றோரு  மரணத்தை கண்டும் காணாமல் இருந்து விட்டு, கடைசியில்  நாங்கள் எல்லாம் தமிழர்கள் தான் என்று  கூறுவது நல்லதல்ல. தஞ்சை மாணவி மரணத்துக்கு விசாரணை கமிஷன்  வேண்டும்'' என்றார்"


மேலும் அவர் கூறுகையில்" தமிழகத்தில் கோயில்களை திறக்க வேண்டும். கருணாநிதி முதலமைச்சராக  இருந்த போது ஆன்மீக பக்தர்களை அவர் மதித்து   ஆட்சிபுரிந்தார் . இப்பொழுதுள்ள ஸ்டாலின் தலைமையிலான   தி.மு.க ஆட்சி ஆன்மீக பக்தர்களை அரவணைத்து செல்ல வேண்டும்."  

Hindu Tamil


Tags:    

Similar News