பாட்டிலுக்கு கூடுதல் 10 ரூபாய் வசூலிப்பிற்கு வைத்த முற்றுப்புள்ளி..
பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் விதித்த விவகாரத்தில் உடனடியாக செயல்பட்டு குடிமக்களை குஷி படுத்திய திமுக நிர்வாகம்.
டாஸ்மார்க் துறை தற்பொழுது பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் சிக்கி வந்த ஒரு துறையாக பார்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த மாதங்களாக டாஸ்மாக் துறை அமைச்சர் முதல் டாஸ்மாக் துறை வரை நடைபெற்ற பல்வேறு குளறுபடிகள் காரணமாக பல தரப்பிலிருந்து பலத்த எதிர்த்து, குற்றச்சாட்டுகள் எழப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் டாஸ்மாக் துறை என்பது அரசாங்கத்திற்கு அதிக வருவாய் கொடுக்கக்கூடிய ஒரு துறையாக இருந்து வருகிறது. இதற்காக ஒரு தனி கவனம் கொடுத்து தான் திமுக அரசு இதை கவனித்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது டாஸ்மாக் துறை குளறுபடிகள் காரணமாக உரிய விலையில் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் எல்லாம் விதித்த போது அதை பின்பற்றாமல் தற்பொழுது தமிழகத்தில் நடந்து வரும் வருமான வரி சோதனைக்கு மத்தியில், டாஸ்மாக்கில் QR கோடு மூலமாக பணம் செலுத்தும் முறையை திமுக அரசு கொண்டு வந்து இருக்கிறது. அது மட்டும் இல்லாது எம்.ஆர்.பி-யில் போட்டு இருக்கும் விலையை காட்டிலும் அதிகமாக விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
எனவே எம்.ஆர்.பிக்கு அதிகமாக விலைக்கு யாரும் கொடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக குடிமக்களை வேறு எங்கும் செல்ல விடாமல் அவர்களுடைய பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண இந்த ஒரு முடிவை திமுக நிர்வாகம் எடுத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News