தென்மேற்கு பருவக்காற்று.. இந்த 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.!
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதே போன்று தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஆங்காங்கை சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்கிறது.
இந்நிலையில், இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்றால் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. மற்ற மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், நாளை நீலகிரி, கோவை, தருமபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.