கன்னியாகுமரியில் 3வது நாளாக கொட்டித்தீர்க்கும் கனமழை: குடியிருப்பை சுற்றி தேங்கியுள்ள மழைநீர்!

வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை நீடித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கன்னாயாகுமரி மாவட்டம் முழுவதும் 3 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.

Update: 2021-11-13 06:07 GMT

வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை நீடித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கன்னாயாகுமரி மாவட்டம் முழுவதும் 3 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.


மேலும், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மணக்காலையில் இருந்து படந்தாலுமூடு செல்கின்ற அதங்கோடு சாலையில் வெள்ளம் புகுந்து குளம் போன்று காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை (நவம்பர் 12) நிலவரப்படி இரண்டு நாட்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த மழையால் 58 வீடுகள் இடிந்தன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது.


இந்நிலையில், நேற்று (நவம்பர் 12) பிற்பகலில் இருந்து மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. மழை தொடர்ந்து இரவு முழுவதும் பெய்து வந்தது. தற்போது இன்றும் மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News