தி.மு.க. அரசின் மெத்தனப்போக்கு ! 50 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம் !
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள சி.கீரனூர் என்ற கிராமம். அங்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்ற அறிவிப்பால் சுற்று வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் அனைவரும் தாங்கள் அறுவடை செய்திருந்த நெல்மணிகளை கொண்டு வந்து குவியல், குவியலாக வைத்திருந்தனர்.
விருத்தாசலம் அருகே உள்ள சி.கிரனூர் என்ற கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைத்து நாசமாகியுள்ளது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள சி.கீரனூர் என்ற கிராமம். அங்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்ற அறிவிப்பால் சுற்று வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் அனைவரும் தாங்கள் அறுவடை செய்திருந்த நெல்மணிகளை கொண்டு வந்து குவியல், குவியலாக வைத்திருந்தனர்.
கடந்த 10 நாட்களாக விவசாயிகள் டன் கணக்கில் நெல்மூட்டைகளை அடுக்கிக்கொண்டே வந்த நிலையில், நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், அவ்வப்போது பெய்து வந்த கனமழையால் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் தண்ணீரில் நனைந்துள்ளது.
இதனால் கொள்முதல் செய்வதற்காக வைக்கப்பட்ட நெல்மூட்டைகள் மழையால் சேதமடைந்துள்ளதை பார்த்து விவசாயிகள் கண்ணீர் விட்டு வருகின்றனர்.இது பற்றி நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளிடம், விவசாயிகள் கடந்த 10 நாட்களாக முறையிட்டு வந்துள்ளனர். ஆனால் அங்கிருந்த அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.
மூட்டை ஒன்றுக்கு 55 ரூபாய் வரை அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இது போன்ற அதிகாரிகள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Source: Maalaimalar
Image Courtesy: Malaimalar
https://www.maalaimalar.com/news/district/2021/08/11134746/2910214/Tamil-News-Heavy-Rain-near-Virudhachalam.vpf