சட்டவிரோதமாக கல்குவாரியில் மண் கடத்தல்... நீதிமன்றம் கொடுத்த எச்சரிக்கை...

சட்ட விரோதமாக கல்குவாரிகளில் இருந்து மண் கடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறதா?நீதிமன்றம் கேள்வி.

Update: 2023-04-29 00:52 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஒத்த வீட்டு பகுதியில் சேர்ந்தவர் ராமசாமி என்பவர் இவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறார். குறிப்பாக இவரது தகவல் செய்த மனுவில் இது பற்றி கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகாவில் லட்சுமிபுரம் என்ற கிராமத்தில் குவால்காரி கல்குவாரி நடத்த அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பகுதிகள் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். குடியிருப்புகள் வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300 மீட்டர் சுற்றளவுக்குள் கல்குவாரி நடத்த அனுமதி வழங்கக்கூடாது என்று சட்ட விதிகளும், ஏற்கனவே நீதிமன்றங்களின் உத்தரவும் தெளிவாக இது பற்றி கருத்துக்களை தெரிவித்து இருக்கிறது.


ஆனால் இவற்றை மீறி இங்கு கல்குவாரி நடத்த அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது சட்டவிரோதமான செயல் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது குவாரி செயல்பாட்டிற்கு அதே பகுதியை உள்ள நீர்நிலைகள் மற்றும் கால்வாய்கள் ஆக்கிரமித்து குவாரிக்கான வாகனங்கள் செல்லும் சாலைகளாக மாற்றப்பட்டு இருக்கிறது. குறிப்பாக இதன் காரணமாக விவசாயமும் பாதிக்கப்படும் ஒரு நிலைமையில் தான் தாங்கள் இருப்பதாகவும் சட்டத்திற்கு எதிராக கல்குவாரி நடத்துவதற்கு அனுமதி ரத்து செய்யப்பட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருக்கிறது.


இந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் அமருப்பிற்கு வந்தது இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா ஆகியோர் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு கூறுகையில், வக்கீல் அறிக்கையானது புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அறிக்கைக்கு முரணாக இருக்கிறது உண்மையான தகவல்களை உடனடியாக அரசிற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News