கோவில் நிலத்தை பட்டா வழங்கிய நிர்வாகம்: மீட்க நடவடிக்கை எடுத்தவருக்கு நீதிமன்றம் அபராதம்!

கோவில் நிலத்தில் பட்டா வழங்கப்பட்டதை நேற்று தரக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அந்த மனுவை தள்ளுபடி செய்து, ₹10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-08-31 12:33 GMT

கோவிலில் நிலங்களை பட்டா போட்டு வழங்கிய நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு, அதை மீட்டு மீண்டும் கோவிலுக்கு தருமாறு என்ற கோரிக்கையுடன் வழக்கு தொடுத்த நபர் மீது வழக்கை தள்ளுபடி செய்து ரூபாய் 10,000 அபராதம் செலுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தான் இந்த வழக்கை கொடுத்துள்ளார். ஈரோடு மாவட்டம் ரங்கபாளையதில் உள்ள கோவில் நிலங்களை மீட்டு மீண்டும் கரிய பெருமாள் கோவிலுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று அவர் தன்னுடைய மனுவில் கூறியிருந்தார்.


இந்த மனுவானது என்னும் பண்டாரி மற்றும் மாலா ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் அமர்வுக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பை தற்போது கூறியுள்ளார்கள். அரசின் சார்பில் அதாவது இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அவர்கள் கூறுகையில், மனுதாரர் கொடுக்கப்பட்ட வழக்கில் அந்த நிலம் ஏற்கனவே தனி நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டு விட்டது. ஆனால் பட்டா வழங்கப்பட்ட நபருக்கு எதிராக வழக்கு தொடுக்காமல் அந்த நிலத்தை மீட்டு மீண்டும் கோயிலுக்கு கொடுக்க வேண்டும் என்று வேறொரு வழக்கை தொடர்ந்துள்ளார்.


கோட் நேரத்தை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் அவர் இத்தகைய வழக்கை தொடர்ந்துள்ளார் என்று அரசு தரப்பு வக்கீல் கூறியிருந்தார். பயனாளர்களுக்கு வழங்கப்பட்ட பட்டா அனைத்தையும் செல்லாத படி ஆக்கும் வகையில் தான் மறைமுகமாக இந்த வழக்கை அவர் தாக்கல் செய்துள்ளதாகவும் வழக்கறிஞர் குறிப்பிட்டார். இதன் காரணமாக நீதிமன்றத்தை அதிகார வரம்பு துஷ்பிரயோகம் செய்வதாக கூறி, அவருடைய மனுவை தள்ளுபடி செய்து அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Input & Image courtesy: ஆலயம்க்காப்போம்



Tags:    

Similar News